நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அவதானம்!

நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அவதானம்!

நகம் கடிக்கும் பழக்கம் உலகில் பலருக்கு உள்ளது. எனினும் அந்த பழக்கம் இருந்தால் அவதானமாக இருக்குமாறு, அந்த பழக்கம் உள்ளவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


நகம் கடிப்பது தவறான பழக்கம் இல்லை.
என்றாலும் நாம் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
நகம் கடிக்கும்போது அழுக்குகள் வாய் வழியாக உடலுக்குள் செல்லும்.
அது நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும்.
குடல்புழுப் பிரச்சனை ஏற்படும் வாய்ப்பு உண்டு.
நகத்தை கடித்தால் நகம் வளருவதற்கு உதவும் திசுக்கள் அழிந்துவிடும்.

இந்த பழக்கத்திலிருந்து விடுபடுவது எப்படி?

நகங்களை வெட்ட வேண்டும்.
கடிக்க முடியாத அளவுக்கு சிறியதாக, வெட்ட வேண்டும்.
அழுக்கு சேராமல் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
பதற்றமான சூழலில் நகத்தை கடிக்காமல் இருக்கவே முடியாது.
அதுபோன்ற நேரத்தில் வேறொரு பழக்கத்தை பழக்கப்படுத்த வேண்டும்.

மன அழுத்தம் மற்றும் இறுக்கமான சூழலை உணரும் குழந்தைகள் இந்தப் பிரச்சனை உண்டு. எனவே அவ்வாறான நிலைமைகளை தவிர்க்க வேண்டும்.