பல நோய்களுக்க தீர்வாகும் நிலவேம்பு

குடற்புழு நீங்கும்


குடற்புழுக்கள் உடலுக்கு தேவையான ஊட்டச் சத்துக்கள் அனைத்தையும் உறிஞ்சிவிடுகின்றன. இதனால் நோயின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும்.

குடற்புழுக்கள் நீங்க நிலவேம்பு இலையை நீரில் கொதிக்க வைத்து கஷாயமாக்கி மூன்று நாட்கள் தொடர்ந்து காலைவேளையில் அருந்தி வரவேண்டும்.

உடல் வலுப்பெறும்: உடல் தேறாமல் மெலிந்து காணப்படுபவர்கள் நில வேம்பு கசாயம் குடித்து வந்தால் பலன் கிட்டும். மயக்கம் நீங்க: சிலருக்கு அடிக்கடி மயக்கம் உண்டாகும். அதிர்ச்சியான நிகழ்வுகளை காணும்போது மயக்கம் ஏற்படும். இந்த மயக்கம் தீர நிலவேம்பு கசாயம் அருந்துவது நல்லது.

பித்த அதிகரிப்பைக் குறைக்கும்


பித்தம் பிசகினால் பிராணம் போகும் என்பது சித்தரின் வாக்கு. அதன்படி பித்தநீர் உடலில் அதிகமானால் உடலில் பல நோய்கள் உருவாகிறது.

இதனால் வாந்தி, மயக்கம் உண்டாகும். இவர்கள் நிலவேம்பை நிழலில் உலர்த்தி பொடி செய்து கசாயம் செய்து அருந்தி வந்தால் பித்தம் குறையும்.

தலைவலி நீங்கும்: அடிக்கடி தலைவலியினால் அவதிப்படுபவர்கள் நிலவேம்பு கசாயத்தை தினமும் இருவேளை அருந்தி வந்தால் தலைவலி நீங்கும்.

தலையில் நீர்க்கட்டு குறையும். தும்மல், இருமல் போன்றவை ஏற்படாது.

குழந்தைகளுக்கு: வயிற்றுப் பொருமல் அல்லது கழிச்சல் உள்ள குழந்தைகளுக்கு நிலவேம்பின் இலையை சாறெடுத்து கொதிக்க வைத்து ஆறிய பின் 5 மி.லி கொடுத்து வந்தால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

அஜீரணக்கோளாறு


நில வேம்பு (காய்ந்தது) 16 கிராம், வசம்புத் தூள் 4 கிராம், சதக்குப்பை விதைத் தூள் 4 கிராம், கோரைக் கிழங்கு தூள் 17 கிராம்.

இவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து 1 டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைத்து அதை ஒரு மணி நேரம் ஊறவைத்து எடுத்து வடிகட்டி தினமும் 2 அல்லது மூன்று வேளை அருந்திவந்தால் அஜீரணக் கோளாறுகள்

நீங்கும்கர்ப்பப்பை கட்டிகள்: தைராய்டு பாதிப்பு உள்ளவர்கள் நிலவேம்பை காயவைத்து கசாயம் செய்து அருந்தினால் தைராய்டு பாதிப்புகள் குறையும். மேலும் பெண்களுக்கு உண்டான சூதகக் கட்டி, கர்ப்பக் கட்டி, தேவையற்ற நீர் போன்றவற்றை நீக்கும்.

எங்கு கிடைக்கும்?


நிலவேம்புப் பொடியில் நிலவேம்பு, சுக்கு, பட்படாகம், வெட்டிவேர், விளாமிட்சை வேர், மிளகு, சந்தனம் போன்ற ஒன்பது விதமான மூலிகைகள் உள்ளன.

இவை அனைத்தும் திப்பியாக அரைக்கப்பட்டு ‘நிலவேம்புப் பொடி’யாகக் கிடைக்கிறது.

நிலவேம்பு பொடி . சித்த மருத்துவ கடைகளில் விற்கப்படுகிறது.

கசாயம்: நிலவேம்பு பொடி 10 கிராம், 400 மி.லி. தண்ணீரில் கலந்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

இந்த நீர் 50 மி.லி.யாக, அதாவது எட்டில் ஒரு பாகமாக ஆகும்போது, அதை எடுத்து வடிகட்டி குடிக்கலாம். இது ஒரு நபருக்கான அளவு.

யாரெல்லாம் குடிக்கக்கூடாது?


7 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு இந்த கசாயத்தை மருத்துவரின் பரிந்துரையில்லாமல் கொடுக்கக்கூடாது.

அதேபோல் காய்ச்சல் வந்து தொடர் வாந்தி, வயிற்றுவலியால் கஷ்டப்படுகிறவர்களுக்கு இந்த கசாயம் கொடுக்கக்கூடாது.

முன்னெச்சரிக்கை – வீட்டில் யாருக்காவது டெங்கு காய்ச்சல் வந்தால், அவருடன் சேர்த்து வீட்டில் உள்ள மற்றவர்களும் நிலவேம்பு கசாயம் குடிக்கலாம்.

காய்ச்சல் வந்த நாளே நிலவேம்பு கசாயம் குடித்தால் நல்லது. எல்லா ஆலோசனைகளையும் மருத்துவரின் பரிந்துரைப்படி செய்வது நல்லது.