காரின் உள்ளே ஏறியதும் இதை செய்யாதீர்கள்!

காரின் உள்ளே ஏறியதும் இதை செய்யாதீர்கள்! கேன்சர் வரை உங்களை இழுத்து செல்லும்!

நம் அனைவர்க்கும் பொதுவாக இருக்கும் ஒருபழக்கம்தான் காரில் ஏறியதும் AC யை ஆன் செய்வது. இது எவளோ பெரிய தவறு தெரியுமா?

காரில் பயணம் செய்யும் போது, நீண்ட தூர பயணத்தின்போதும் நாம் காரில் ஏறியதும் காரின் AC யை உடனே ஆன் செய்துவிடுவோம். இது மிகவும் தவறு.

AC காரில் ஏறியதும் உடனே AC யை ஆன் செய்யாமல் முதலில் காரின் ஜன்னல்களை நன்கு திறந்துவிட வேண்டும். அதன்பின்பு சிறிது நேரம் கழித்து AC யை ஆன் செய்யலாம்.

ஏன் உடனே AC ஆன் செய்ய கூடாது தெரியுமா..?

பொதுவாக காரினுள் இருக்கும் டாஷ்போர்டு, இருக்கைகள், இதர பாகங்கள் பிளாட்டிக்கினால் ஆனது. இவைகள் அனைத்தும் பென்சீன் என்னும் ஒருவித நச்சுத்தன்மையை உமிழ்கின்றன. இது கேன்சரை உருவாகும் சக்தி கொண்டது.

சாதாரணமாக மனித உடல் ஏற்றுக்கொள்ளும் பென்சீனின் அளவு சதுர அடிக்கு 50 மில்லி கிராம். மட்டுமே ஆனால் வீடுகளில் நிழலில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் காருக்குள் சதுர அடிக்கு 400 முதல் 800 மில்லி கிராம் என்ற அளவில் பென்சீன் இருக்கும்.

இதே போன்று வெயிலில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் காருக்குள் பென்சீனின் அளவு சதுர அடிக்கு 4000 மில்லி கிராம் வரை இருக்கும். இது மோசமான கெடுதலை விளைவிக்கும்.

விளைவுகள் :

இதன் காரணமாக கேன்சர், லுக்கூமியா, சிறு நீரக பாதிப்பு போன்ற பல பதிப்புகள் ஏற்படுத்தும் தன்மை கொண்டது.எனவே காரை எடுக்கும் முன் சிறிது நேரம், காரின் கதவுகள் திறந்து வைக்கப்பட்டு பின்னர் பயன்படுத்துவது நல்லது.

அக்குளில் உள்ள முடியை நிரந்தரமாக அகற்ற இப்படி செய்யுங்க..

பெண்கள் பட்டுப்போன்ற சருமம் வேண்டுமென்று தங்கள் கை, கால் மற்றும் அக்குளில் உள்ள ரோமத்தை எல்லாம் நீக்குவார்கள்.

மேலும் ரோமத்தை நீக்க ஷேவிங், வாக்சிங் போன்றவற்றை மேற்கொள்வார்கள். குறிப்பாக அக்குளில் உள்ள முடியை நீக்க பெரும்பாலானோர் ஷேவிங் தான் செய்வார்கள்.

இப்படி ஷேவிங் செய்வதால், பலருக்கு அக்குளில் அரிப்புக்கள் மற்றும் எரிச்சல்கள் போன்றவை ஏற்படும்.

ஆனால் நம் வீட்டு சமையலறையில் உள்ள இரண்டு பொருட்களைக் கொண்டு எளிய முறையில் அக்குளில் உள்ள முடியை நீக்கலாம்.

சமையலறைப் பொருட்கள்அக்குளில் உள்ள முடியை இயற்கை வழியில் நீக்க உதவும் அந்த இரண்டு சமையலறைப் பொருட்கள் தான் எலுமிச்சை மற்றும் சர்க்கரை.

செய்யும் முறை 2 டீஸ்பூன் எலுமிச்சை மற்றும் 1 டீஸ்பூன் சர்க்கரையை ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து, அக்குளில் தடவி 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பின் ஈரமான துணியால் துடைத்து எடுக்க வேண்டும். எவ்வளவு காலம் செய்ய வேண்டும்? இந்த சிகிச்சையை வாரத்திற்கு 2 முறை செய்ய வேண்டும்.

இப்படி செய்து வந்தால், அக்குளில் வளரும் முடியின் வளர்ச்சி குறைந்து, நாளடைவில் முடி வளர்வதே நின்றுவிடும்.

மற்றொரு முறை வேண்டுமானால் எலுமிச்சை சாற்றில் தேன் கலந்து, அக்குளில் தடவி 15 நிமிடம் கழித்து, ஈரமான துணியால் துடைத்து எடுக்க வேண்டும்.

இந்த முறையின் மூலமும் அக்குள் முடியை நிரந்தரமாக தடுக்கலாம். குறிப்பு எலுமிச்சையை சருமத்திற்குப் பயன்படுத்திய பின், தவறாமல் மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்துங்கள்.

இதனால் எலுமிச்சையால் அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படுவதைத் தடுக்கலாம். முக்கியமாக இந்த முறையை அக்குளில் மட்டுமின்றி, கை, கால்களில் வளரும் முடியை நீக்கவும் பயன்படுத்தலாம்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி