டாய்லெட்டில் தொலைபேசி உபயோகிக்கும் நபரா நீங்கள்?

டாய்லெட்டில் தொலைபேசி உபயோகிக்கும் நபரா நீங்கள்? அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்!

ஐயோ இந்த வீட்டுல பிரைவேசியே இல்லை என்று புலம்பும் நண்பர்கள் பெரும்பாலும் தனிமையாக சிறிது நேரம் அமர்ந்து போன் பயன்படுத்துவதும், ரிலாக்ஸ் மூட்ல செய்தித்தாள்களை டாய்லெட்டில் உட்கார்ந்து படிப்பதும் பழக்கமாக வைத்து உள்ளனர்.

நம்மில் பலருக்கும் இந்த பழக்கம் அதிகமாகவே உள்ளது. சரி அவ்வாறு கழிவறையில் தொலைபேசி உபயோகிப்பதும், செய்தித்தாள்கள் வாசிப்பதும் சரியா? அவ்வாறு செய்வதால் எண்ணலாம் வியாதிகள் வரும் தெரியுமா?

ரத்த நாளங்கள் பெரிதும் பாதிக்கும்

நீண்ட நேரமாக டாய்லெட்டில் அமரும் போது அழுத்தம் அதிகமாகி, ஆசன வாயை சுற்றி உள்ள ரத்த நாளத்தில் பெரிதும் அழுத்தம் ஏற்படுகிறது. இதன் காரணமாக
ரத்தநாளங்கள் பெரிதும் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது.

கழிவறையில் நீண்டநேரம் தொலைபேசி பயன்படுத்தும் போது உங்கள் தொலைபேசியில் 18 மடங்கு கிருமிகள் அதிகரித்து காணப்படும் வாய்ப்புகள் மிகவும் அதிகம்.

அதுமட்டுமில்லாமல் ஒரு சிலர் டாய்லெட்டில் அமர்ந்தவாறே போனில் வேறு ஒருவருடன் பேசிக்கொண்டு இருப்பார்கள். இது போன்ற சமயத்தில், கிருமிகள நம் வாய் மற்றும் மூக்கு வழியாக உள் செல்ல வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது.

அதிக நேரம் அழுத்தம் கொடுத்து பத்து நிமிடத்திற்கு மேல் அமரும் போது, மலக்குடல் பிரச்சனை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தொடர்புடைய செய்தி:

வருங்கால கணவனிடம் பெண்கள் கூற வெட்கப்படும் 10 விஷயங்கள்!

பெண் பார்த்தாயிற்று என தெரிந்து விட்டாலே கல்யாண குஷி பிரகாசமாக தெரிகிறது, முகம் ஜொலிக்கிறது என கூறி கிண்டல் செய்ய ஒரு பெரும் கும்பலே நம்மை சுற்றி திரியும்.

ஆண்களையே முகம் சிவக்க வைப்பார்கள் என்றால் பெண்கள் பற்றி கூறவா வேண்டும்.

தானாகவே பல கனவுகள் காரணத்தால் பெண்கள் அதிக வெட்கத்துடன் காணப்படுவார்கள்.

இதில், தனது வருங்கால கணவனிடம் பெண்கள் கூற வெட்கப்படும் விஷயங்கள் என்னென்ன என்று இங்கு காணலாம்…

விஷயம் #1

தங்களிடம் இருக்கும் கை சூப்புவது, நகம் கடிப்பது போன்ற சின்ன சின்ன கெட்ட பழக்கங்கள் பற்றி கூற கூச்சப்படுவார்கள்.

விஷயம் #2

தங்கள் கணவரை ஹேன்ட்சம், ஸ்மார்ட்டாக இருப்பதை கூற கூட சில பெண்கள் வெட்கப் படுவார்கள்.

விஷயம் #3

தங்களுக்கு பிடித்த விஷயங்கள் குறித்தும், காதலுக்கான வார்த்தைகள் பிரயோகிக்கவும் பெண்கள் அதிகம் வெட்கப்படுவார்களாம். குறிப்பாக ஐ லவ் யூ, டார்லிங் போன்ற வார்த்தைகள் பயன்படுத்த.

விஷயம் #4

இருவரின் சம்பாத்தியம் கொண்டு எப்படி பணம் சேமிப்பது, எப்படி எல்லாம் திட்டங்கள் போடுவது என்பது குறித்து பேச சங்கோஜமாக இருக்குமாம்.

விஷயம் #5

கணவனின் வாழ்வில், தனக்கான இடம் அதிகமாக வேண்டும், அவர் தினமும் தன்னுடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும் என்பதை கூற வெட்கப்படுவார்களாம். முக்கியமாக கணவர் போகுமிடமெல்லாம் உடன் வர வேண்டும் என கேட்க தயக்கம் கொள்வார்களாம்.

விஷயம் #6

உடலுறவில் ஈடுபடுவது குறித்து தங்களுக்கு பிடித்த விஷயங்கள் பற்றி பேசவும் வெட்கப்படுவார்களாம்.

விஷயம் #7

விதவிதமான நெயில் பாலிஷ், ஹேர் கண்டிஷனர், ஷாம்பூ பயன்படுத்துவது குறித்து கூற தயக்கம் கொள்வார்களாம்.

விஷயம் #8

தங்களது உடல் வாகு எப்படி இருக்கிறது என்பது குறித்து கேட்டறிந்துக் கொள்ள வெட்கப்படுவார்களாம்.

விஷயம் #9

சோகமான, உருக்கமான காட்சிகளை கண்டு தாங்கள் அழும் போது அதை பார்த்து கிண்டலடிக்க கூடாது என்பதை கூற தயங்குவார்களாம்.

விஷயம் #10

தன் மீது அதிக காதலை வெளிப்படுத்த வேண்டும், எப்போதும் என்னை கொஞ்ச வேண்டும், அன்பை மழை போல் கொட்ட வேண்டும் என கேட்க தயங்குவார்களாம்.